
தமிழ் சினிமாவில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் தான் ஜெயம் ரவி.
தொடர்ந்து ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்து தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருகிறார். ஜெயம் ரவி 20 ஆண்டுகளாக தமிழ் திரை உலக நடிக்க வருகிறார்.
இத்தனை ஆண்டில் நடிப்பில் வெளியான தோல்வி படங்கள் என்று கூறினால் அது மிகவும் குறைவுதான். அந்த அளவுக்கு அனைத்துமே ஜெயமாக அமைந்தது.
ஏனென்றால் பெரும்பாலும் அவர் நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் பல சிறந்த திரைப்படத்தில் நடித்து ஹிட் கொடுத்த ஜெயம் ரவிக்கு மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த தனி ஒருவன் திரைப்படம் இவருக்கு நல்ல அந்தஸ்தை கொடுத்தது.
அதைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்துடன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் 500 கோடி வசூலை செய்து ஹிட்டு கொடுத்தது.
பொன்னியின் செல்வன் என்கின்ற டைட்டில் ரோலிலேயே ஜெயம் ரவி நடித்திருப்பார். இந்த ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் பொன்னியின் செல்வன் பாகம் 500 கோடி வசூல் ஈற்றியதால் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் 1000 கோடியை தட்டித் தூக்கும் என கூறப்படுகின்றது.
அது மட்டும் சாத்தியமானால் தமிழ் சினிமாவிலேயே ஆயிரம் கோடி வசூல் செய்த படம் இதுதான் என கூறப்படும். அதுமட்டும் இல்லாமல் மனிதன் என்றென்றும் புன்னகை போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனருடன் சேர்ந்து ஜெயம் ரவி இறைவன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்திற்காக அவரின் கெட்டப் பார்ப்பதற்கு சூப்பராக இருந்தது. இந்நிலையில் கடத்த மாதம் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினம் முடிந்தது.
இதில் பல நட்சத்திர பிரபலங்கள் தங்களது காதலர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.
அந்த வகையில் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி காதலர் தினத்தில் தனது கணவருடன் தாஜ்மஹாலில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகின்றது.
இதில் இருவரும் செம ரொமான்டிக்காக இருக்கிறார்கள்.