
அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், தமன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை.
அஜித் – ஷாலினி
நடிகர் அஜித் நடிகை ஷாலினியை கடந்த 2000 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்தார். ஆனால் திருமணத்திற்கு பின் நடிகை ஷாலினி சினிமாவில் நடிக்கவில்லை. மேலும் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கம் வந்த ஷாலினி தன்னுடைய கணவரான அஜித்தின் புகைப்படங்களை, தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில் அஜித்தின் மாமனார் மற்றும் ஷாலினியின் தந்தை பற்றி இதுவரை பலருக்கும் தெரியாத விஷயம் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ஷாலினின் தந்தை பாட்டு பாடுவதில் திறமையானவராக இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.
அஜித்தின் மாமனார்
இவர் குறிப்பாக மறைந்த இசையமைப்பாளரும், பாடகருமான டி எம் எஸ் குரலில் பாடல்கள் பாடி யுள்ளார். மேலும் அதை youtubeலும் பதிவு செய்து வருகிறார்.
எனவே இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள், இவருடைய குரல் அப்படியே டி எம் எஸ் குரல் போலவே இருக்கிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் அஜித்தின் மாமனாருக்குள் இப்படியொரு திறமை ஒளிந்து இருக்கிறதா எனவும் கூறி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..