இயக்குனர் சித்திக் மரணம்…! பிரெண்ட்ஸ், காவலன் ஹிட் பட இயக்குனருக்கு ரசிகர்கள் இரங்கல்…!!

மலையாள இயக்குனர் சித்திக்

இயக்குனர் சித்திக் கொச்சியில் இசுமாயில்”ஹாஜி மற்றும் ஜைனாபா ஆகியோருக்குப் பிறந்தார். இவர் சஜிதா என்பவரை 6 மே 1984 இல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு சுமயா , சாரா , மற்றும் சுகூன் என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.

இயக்குனர் சித்திக் மரணம்! பிரெண்ட்ஸ், காவலன் பட இயக்குனருக்கு ரசிகர்கள் இரங்கல் | Director Siddique Passes Away After Cardiac Arrest

   
சித்திக் இயக்கிய படங்கள்

இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் ஏராளமான படங்களை எடுத்திருக்கிறார். தமிழில் விஜய், சூர்யா நடிப்பில் வெளியான ‘ஃப்ரெண்ட்ஸ்’ படத்தை இயக்கியிருந்தார். இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் நேசமணி கேரக்டர் பிரபலமானது. மேலும் விஜயகாந்த் நடித்து பெரிய வரவேற்பை பெற்ற “எங்கள் அண்ணா” படத்தை இயக்கிபின்னர் தமிழில் பிரசன்னா நடித்த ‘சாது மிரண்டா’, விஜய் நடித்த ‘காவலன்’, அரவிந்த்சாமியின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ போன்ற ஹிட் படங்களை இயக்கினார்.

இயக்குனர் சித்திக் மரணம்! பிரெண்ட்ஸ், காவலன் பட இயக்குனருக்கு ரசிகர்கள் இரங்கல் | Director Siddique Passes Away After Cardiac Arrest

மரணம்

கடந்த சில ஆண்டுகளாக, இவருக்கு கல்லீரல் பிரச்சினைக்காக தொடர்ந்து கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட நிலையில், நேற்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பும், இன்று சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.  இவருக்கு வயது 69. இவரின் மரணத்திற்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தற்போது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

பிரபல இயக்குனர் சித்திக்குக்கு மாரடைப்பு.. மருத்துவமனையில் சிகிச்சை!