
தமிழ் திரையுலகில் தல என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் .லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்காக நடிகர் அஜித்குமார் அவர்கள் அஜர்பைஜான் நாட்டில் உள்ளார் .
அஜித்குமார் அவர்கள் புத்தாண்டை துபாய் நாட்டில் தனது குடும்பத்தாருடன் கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.மே லும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெண் ரசிகை ஒருவருடன் நடனமாடியும் மகிழ்வித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது தன்னை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த ரசிகர் ஒருவரின் செல்போனை கேட்டு, அவர் எடுத்ததை அழித்து விட்டு கொடுக்கிறார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சிலர் இதனை விமர்ச்சித்தும் சிலர் அவருக்கு ஆதரவாகவும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.