அப்படியா?.. 40 வயது நடிகருடன் இணையும் அஜித்தின் ரீல் மகள் அனிகா!.. எந்த மாதிரியான ரோல் தெரியுமா?

நடிகை அனிகா

நடிகை அனிகா கேரளாவின் மஞ்சேரியில் பிறந்தார். இவர் 2010 இல் கதை துடாருன்னு என்ற மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

Anikha Surendran (aka) Anikhaa Surendran

   

இதில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார். மேலும்  விஸ்வாசம் , குயின் என்ற வலைத் தொடர், நானும் ரெளடி தான் என்ற படத்தில் நயன்தாராவின் சிறு வயது கதாபாத்திரத்திலும், மிருதன் படத்தில் ஜெயம் ரவியின் தங்கையாகவும் நடித்திருந்தார். பின் தெலுங்கு படமான புட்ட பொம்மா மூலம் இவர் முன்னணி நடிகையானார். தற்போது அனிகா ஓ மை டார்லிங் என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார்.

தனுஷ் படத்தில் இணையும் அஜித் பட பிரபலம் | Tamil cinema ajith movie fame joins with dhanush movie

நடிகர் தனுஷ் இயக்கும் படம்

தற்போது தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50 வது படத்தின் போஸ்டர் சமூக வளைதள பக்கத்தில் வெளியாகி வைரலான நிலையில், இப்படம் வட சென்னை பகுதியில் கெங்ஸ்டர் கதையை மையமாக வைத்து உருவாகிறது. இப்படத்தின் ஷூட்டிங், தற்போது தொடங்கி இருப்பதாக  கூறப்படும் நிலையில், அந்த கேங்ஸ்டர் உலகில் ஒரு தைரியமான பெண்ணாக அனிகா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

50வது படத்தை தானே இயக்கி நடிக்கும் தனுஷ் D50 பட அறிவிப்பு,dhanush next directorial his d50 movie shoot