எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய பஹத் பாசில்… மாமன்னன் சர்ச்சை… என்ன செய்திருக்கிறார்? நீங்களே பாருங்க…!!

பஹத் பாசில்

பஹத் பாசில் என்பவர் இந்திய நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார், இவர் முக்கியமாக மலையாள சினிமாவில் பணிபுரிகிறார். சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தோன்றியுள்ளார். இவர் பிரபல நடிகை நஸ்ரியாவின் கணவர் ஆவார்.

It's all about mutual respect, says Nazriya on her marital life with Fahadh Faasil, Nazriya and Fahadh

   

மாமன்னன் என்பது மாரி செல்வராசின் எழுத்து, இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் வெளிவந்த இந்தியத் தமிழ் அரசியல் பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும். இப்படத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் சமீபத்தில் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி, பலரின் கவனத்தை ஈர்த்த நிலையில், தியேட்டரில் வந்த போது நடந்த விவாதங்களை விட தற்போது ஓடிடி ரிலீசுக்கு நடக்கும் விஷயம் அப்படியே தலைகீழாக மாறி  இருக்கிறது.

மாமன்னன் படத்தின் First லுக் போஸ்டர் வெளியானது | The first look poster of Mamannan has been released. - Thirai Ula

இப்படத்தில் ஜாதி வெறிகொண்ட வில்லனாக படத்தில் வந்த ரத்னவேலு கதாபாத்திரத்தை தான் நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர் மற்றும் இப்படத்தில் வரும் அவரது காட்சிகளை எடுத்து ஜாதி பெருமை பேசும் பாடல்கள் இணைத்து சோசியல் மீடியாக்களில் வெளியிட்டும் வருகின்றனர். மேலும் அவரை எங்க ஜாதி என பல்வேறு பிரிவினரும் சொந்தம் கொண்டாடி வரும் சூழலில், இதில் எண்ணெய் ஊற்றி இன்னும் எரியவைக்கும் விஷயம் ஒன்றை பஹத் பாசில் செய்து இருக்கிறார். அதாவது ரத்னவேலு கதாபாத்திரம் மாஸாக இருக்கும் மூன்று புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தின் கவர் புகைப்படமாக பஹத் வைத்துள்ளார். அதுவும் இப்போது வைரலாக பரவி வருகிறது.

எரியும் ஜாதி வெறியில் எண்ணெய் ஊற்றிய பஹத் பாசில்.. ரத்னவேலு என்ன செய்திருக்கிறார் பாருங்க | Fahadh Faasil Cover Pic Maamannan Rathnavel Viral