நடிகை அனுஷ்காவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க…!!

நடிகை அனுஷ்கா

தென்னிந்திய திரையுலகில் கடந்த சில வருடங்களுக்கு முன் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா ஷெட்டி. கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில், 1980-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ம் தேதி பிறந்த இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மட்டும் நடித்துவருகிறார். இவர் நடித்த சில திரைப்படங்கள் மலையாளத்திலும், இந்தியிலும் மொழி மாற்றம் செய்து திரையிடப்பட்டுள்ளது. இவர் நடித்த முதல் திரைப்படம் 2005-ல் நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்த சூப்பர் எனும் தெலுங்கு திரைப்படமாகும். பின் 2006-ல், ரெண்டு எனும் திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து தமிழில் அறிமுகமானார்.

   

 

தொடக்கத்தில் ஒரு சராசரி கவர்ச்சி நாயகியாக அறியப்பட்ட இவர், அருந்ததி திரைப்படத்தின் மூலம் தனது நடிப்புத்திறனை நன்கு வெளிப்படுத்தினார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததுடன், அனுஷ்காவுக்கு நல்ல பெயரையும், புகழையும் பெற்றுத்தந்தது. இதனையடுத்து அனுஷ்காவிற்கு சிங்கம் திரைப்படம் மாபெரும் வெற்றியை தேடி கொடுத்த நிலையில், இதை தொடர்ந்து சிங்கம் 2, வேட்டைக்காரன், தெய்வத்திருமகள், வானம், லிங்கா, என்னை அறிந்தால் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார்.

Actress Anushka Shetty remembers 'Arundhati' as film completes 13 years - Telugu Bullet

பின் ஒரு கட்டத்தில் அவரது உடல் எடை அதிகரித்தது. இதனால் சினிமாவில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. இதன்பிறகு ஓரிரு திரைப்படங்கள் மட்டுமே நடித்து வந்தார். தற்போது அனுஷ்கா மீண்டும் Miss Shetty Mr Polishetty என்ற படத்தின் மூலம் கம்பேக் கொடுக்கவுள்ளதாகவும், இப்படம் விரைவில் திரைக்கு வரவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Poster release of Anushka starrer 'Miss Shetty Mister Polishetty' | அனுஷ்கா நடிக்கும் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலிஷெட்டி' படத்தின் போஸ்டர் வெளியீடு

அம்மாவுடன் அனுஷ்கா

இந்நிலையில், நடிகை அனுஷ்கா தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அனுஷ்கா தனது இணைய பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..