மனைவியின் பிறந்த நாளை வேற லெவலில் கொண்டாடிய நடிகர் ஸ்ரீகாந்த்.. வெளியான அழகிய புகைப்படங்கள்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வளம் வந்தவர்தான் நடிகர் ஸ்ரீகாந்த். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.

   

இவர் முதல் முதலாக 2002 ஆம் ஆண்டு வெளியான ரோஜா கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து இவர் நடித்த பார்த்திபன் கனவு, தெலுங்கில் ஆடவாரி மாடலாகு அர்தலு ஆகிய திரைப்படங்கள் நல்ல வெற்றி பெற்றன.

பின்னர் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இறுதியாக இவர் சுந்தர் இயக்கத்தில் வெளிவந்த காபி வித் காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதனிடையே இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு வந்தனா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ஸ்ரீகாந்த் அடிக்கடி தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.

தற்போது ஸ்ரீகாந்த் தனது மனைவியின் பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.