திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற நடிகர் அருண் விஜய் தனது மனைவியுடன்…! வெளியான புகைப்படங்கள் இதோ…!

நடிகர் அருண் விஜய்

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகனான நடிகர் அருண் விஜய், தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார். இவர், சுந்தர் சியின் முறை மாப்பிள்ளை (1995) திரைப்படத்தில் அறிமுகமானார் . துள்ளி திரிந்த காலம் (1998) மற்றும் பாண்டவர் பூமி (2001) ஆகிய படங்களில் ஆரம்பகால வெற்றியைப் பெற்றார்.

   

மேலும் மலை மலை (2009), மாஞ்சா வேலு (2010), தடையற தாக்க (2012), குற்றம் 23 (2017) ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்ததற்காக திருப்புமுனை வெற்றியையும் அங்கீகாரத்தையும் பெற்றார். இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு புர்வீ என்ற மகளும், அர்ணவ் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

பின்னர் இவரின் திரைப்படங்கள் ஹிட் ஆகாத காரணத்தால் நடிப்பிலிருந்து சற்று  ஒதுங்கி, தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தார். இதனையடுத்து அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம், சினிமா பயணத்தில் பெரும் திருப்பு முனையாக இப்படம் அமைந்தது. தற்போது இவர் அச்சம் என்பது இல்லையே என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மேலும் இவர் நடிக்கும் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் நடிகர் அருண் விஜய் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்று இருக்கிறார். மேலும் அவர் தனது மனைவி உடன் கிரிவலம் சென்று இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ..

Gallery

Gallery