
அதிதி ஷங்கர்
தமிழ் சினிமாவின் பிரபல திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஷங்கரின் 2-வது மகள் அதிதி. இவர் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்பை முடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் சென்சேஷன் நடிகையாக வலம் வருபவர். அதிதி ஷங்கர் நடிகர் கார்த்தியின் விருமன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து மக்கள் மனதை கவர்ந்து, இவருக்கெனெ பல ரசிகர்கள் சேர்ந்துள்ளனர். மேலும் வெற்றிப்படங்களை கொடுத்து தனது தந்தையிடம் தான் ஒரு நல்ல நடிகை என அதிதி ஷங்கர் நிரூபித்துள்ளார். ஆனாலும், தனது மகளுக்கு ஒரு ஸ்ட்ரிக்ட் கண்டிஷனை ஷங்கர் போட்டுள்ளார்.
ஷங்கர் போட்ட கண்டிஷன்
இன்னும் 2 ஆண்டுகள் மட்டும் எவ்வளவு படம் வேண்டுமானாலும் நடிக்கலாம். ஆனால், 2 ஆண்டுகளுக்கு பிறகு கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதிதி ஷங்கருக்கு ஒரு தந்தையாக கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் தற்போது தொடர்ந்து பல படங்களை கமிட் செய்து நடித்து வருகிற அதிதி, அடுத்து நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி அறிமுகமாகும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் விஷ்ணு வர்தன் இயக்குகிறார்.