நடிகர் தனுஷ் இது!!! சின்ன வயசுல எப்படி இருக்கிறார் தெரியுமா?… வைரலாகும் புகைப்படங்கள்…

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில்  ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரின் உண்மையான பெயர் வெங்கடேஷ் பிரபு.இவர் தமிழ் திரைப்பட இயக்குனர் கஸ்தூரி ராஜ் இரண்டாவது மகனும் ,இயக்குனர் செல்வராகவனின்  இளைய சகோதரர்  ஆவார்  .

   

இவர் 2002 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில்  அறிமுகமானார்.இதை தொடர்ந்து ‘காதல் கொண்டேன்’ என்ற திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

இவர் தமிழில்  ‘திருடா திருடி’ தேவதையை கண்டேன் , புதுப்பேட்டை, திருவிளையாடல் ஆரம்பம், போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘ஆடுகளம் ‘படத்திற்காக  சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருதை பெற்றுள்ளார்.

இவர் மயக்கம் என்ன,  தங்க மகன், மாரி, வடசென்னை, வேலையில்லா பட்டதாரி,  போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு வெளியான அசுரன் திரைப்படம் ஆனது ஒரு மாதத்திற்குள் 100 கோடி வசூலை பெற்றுள்ளது.

100 கோடி வசூல் செய்த திரைப்பட பட்டியலில் அசுரன் படம் இடம்பெற்றுள்ளது. இவர் நடிகர் மட்டுமல்ல பாடகர் ,தயாரிப்பாளர், என பன்முக திறமைகளை கொண்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

அதை தொடர்ந்து இந்தியில் பிரபல திரைப்படமான காஞ்சனா திரைப்படங்களில் இவர் நடித்திருக்கின்றார். அதை தொடர்ந்து தமிழில் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது இவரின் சிறு வயது புகைப்படங்கள் மற்றும் அவரது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.