புதுமாப்பிள்ளையை கிண்டல் செய்யும் போட்டோகிராபர்… வைரலாகும் kpy தீனாவின் கலக்கல் வீடியோ…

விஜய் டிவியில் காமெடியன்களாக அறிமுகமாகி தற்போது சினிமாவில் நுழைந்துள்ள பிரபலங்கள் பலரும் உள்ளனர். அவ்வகையில் விஜய் டிவியில் காமெடியனாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் தீனா. இவர் தற்போது சினிமாவில் நுழைந்து பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

   

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் காமெடியாக அறிமுகமானவர்தான் தீனா. தன்னுடைய இயல்பான காமெடி மூலமாக ஏராளமான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர். தமிழ் சினிமாவில் நுழைந்த இவர் பா பாண்டி,கைதி மற்றும் மாஸ்டர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் விளம்பர படங்களிலும் தற்போது நடித்து வருகின்றார்.  இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடம் உதவி இயக்குனராக பணியாற்றுவதற்கு தனக்கு மிகுந்த ஆசை எனவும் கூறியுள்ளார். இவருக்கென இன்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் நடிகர் தீனாவுக்கு திருமணம் நடந்து முடிந்தது. அவர் பிரகதி என்பவரை திருமணம் செய்துள்ளார். அவர் ஒரு கிராபிக் டிசைனர்.

இந்த திருமணத்தில் ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினர்.  இந்நிலையில் இவர்களின் திருமண புகைப்படங்களை ஐஸ்வர்யா போட்டோஸ் கம்பெனியினர் எடுத்துள்ளனர். தற்பொழுது  ஐஸ்வர்யா போட்டோஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  தீனாவுடனான கலக்கல் காமெடி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது அதிகம் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by ISWARYA PHOTOS™ (@iswaryaphotos)