தொகுப்பாளினி அர்ச்சனாவா இது?… ஆள் அடையாளம் தெரியாமல் இருக்காங்களே… வைரல் புகைப்படம்…

90ஸ் காலகட்டத்தில் இருந்தே ஆங்கரிங் செய்து மக்கள் மத்தியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜே அர்ச்சனா. இவர் முதன் முதலில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதை தொடர்ந்து சொர்ணமால்யா விட்டுச் சென்ற ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார்.

   

இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றார். இவர் 2004ல் வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் தொலைக்காட்சியில் இருந்து விலகி இருந்தார் அர்ச்சனா. இவருக்கு சாரா என்ற ஒரு மகள் உள்ளார்.

பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரிகம’ ரியாலிட்டி ஷோவில் தொகுபாளினியாக களம் இறங்கினார். இதைத்தொடர்ந்து அர்ச்சனாவும் அவரது மகளும் சாராவும் இணைந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சூப்பர்மாம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் தொகுப்பாளினி அர்ச்சனா. இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களையும் , விடீயோக்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.   தற்போது இவரின் டீன் ஏஜ் புகைப்படம் ஒன்று திடீரென்று  இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வைரல் புகைப்படம்…