நடிகர் பக்ரூவின் மனைவி மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படங்கள் இதோ…

கேரள மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் தான் நடிகர் கின்னஸ் பக்ரூ.

   

அஜய் குமார் என்று பெயர் இருந்தாலும் இவரை கின்னஸ் பக்ரூ என்று கூறினால் தான் திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு நன்றாகத் தெரியும்.

மலையாளத் திரை உலகில் முன்னணி காமெடி நடிகராக வளம் வருகிறார்.

இவர் ஒரு திரைப்படத்தில் முழு நீள கேரக்டரில் நடித்ததற்காக மிகவும் உயரம் குறைந்த நடிகர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் ஆரம்பத்தில் மிமிக்ரி கலைஞ்சராக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து தமிழில் அற்புதத் தீவு,காவலன் மற்றும் ஏழாம் அறிவு உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு காயத்ரி மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தீப்தா கீர்த்தி என்ற மகள் ஒருவர் உள்ளார்.

இந்நிலையில் நடிகர் பக்ரு, தனது மனைவி காயத்ரி மோகன் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இவருக்கு இவ்வளவு பெரிய மகளா என்றும் அசப்பில் அவர் ஹீரோயின் போல் இருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.

இவர் ஸ்கூல், காலேஜ் படிக்கும்போது தன்னால் சைக்கிள், பைக் ஓட்ட முடியவில்லை என்ற கவலையை டிரைவராக இருந்து தன் நண்பர்கள் தான் நிவர்த்திசெய்தார்கள்.

தற்போது என் மகள் நிவர்த்தி என் சைக்கிள் ட்ரைவர்.

எனக்கு வந்த குறை என் மகளுக்கு இல்லை என்பதற்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.