கல்யாணம் ஆகாமல் கர்ப்பமான நடிகை இலியானாவிற்கு குழந்தை பிறந்தாச்சு.. இதோ வெளியான குழந்தையின் புகைப்படம்..!!

இலியானா

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான இலியானா, 2006 ஆம் ஆண்டு கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

   

இவர் விஜய்யின் நண்பன் படம் மூலம் பல ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ள இலியானா பாலிவுட் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த நிலையில், சமீபகாலமாக அதுவும் குறைந்துவிட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இலியானா கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் வெளிவந்த நிலையில், திருமணம் ஆகாமல் இலியானா எப்படி கர்ப்பமாகினார் என்று பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் பரவி வந்தது.

இலியானா டி குரூஸ்

குழந்தை பிறந்தாச்சு

இந்நிலையில் கடந்த மே மாதம் அவருடைய காதலர் Michael Dolan என்பவரை இலியானா திருமணம் செய்துகொண்டுள்ளதாகவும், ஆனால் இந்த திருமணம் நடந்த விஷயம் வெளி உலகிற்கு தெரியாமல் இருந்துள்ளது.

Ileana Announce Her Pregnancy

இந்நிலையில் கர்ப்பமாக இருந்த இலியானா கடந்த ஆகஸ்ட் 1 ல் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் மற்றும் அவரது குழந்தைக்கு கோவா ஃபீனிக்ஸ் டோலன் (Koa Phoenix Dolan) என்று பெயர் வைத்துள்ளதாகவும் தனது இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதோ பிறந்த குழந்தையின் புகைப்படம்..