எல்லாரும் அம்மா மேல தான் பாசமா இருப்பாங்க… ஜெனிலியா மாமியார் இப்படியா..? இன்ஸ்டா பதிவு பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…!!

மும்பையில் பிறந்த நடிகை ஜெனிலியா தமிழ் சினிமாவில், சில படங்களில் நடித்தாலும் சிறந்த நடிகை என்ற பெயர் பெற்றவர். இவர் இயக்குனர் சங்கர் இயக்கிய பாய்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் விஜய் உடன் சச்சின், பரத்துடன் சென்னை காதல், ஜெயம் ரவியுடன் சந்தோஷ் சுப்ரமணியன், தனுசுடன் உத்தமபுத்திரன் போன்ற சில படங்களில் நடித்தாலும், தனது இயல்பான நடிப்பு திறமையால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

   

ஜெனிலியா பாலிவுட் நடிகரான ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவருக்கு தற்போது இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவருக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆனாலும், அவருடைய மாமியாரை அம்மாவாக நேசித்து வருகிறார் என்பது அவர் வெளியிட்ட பதிவின் மூலம் தெரிகிறது.

அதில் இன்று அவரது மாமியாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி, இன்ஸ்டாவில் இந்த பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் “என்னை உங்களை மகள் போல் நேசித்ததற்கு நன்றி மற்றும் முற்போக்கான ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் கற்றுக் கொடுத்ததுக்கும் நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாமியார் மேல் இவ்ளோவ் பாசமா? இன்ஸ்டாகிராமில் உருகிய ஜெனிலியா – வைரல் பதிவு! - Update News 360

ஜெனிலியாவின் மாமியாரான வைஷாலி தேஷ்முக், மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்த விலாஸ்ராவ் தேஷ்முக் என்பரது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

View this post on Instagram

 

A post shared by Genelia Deshmukh (@geneliad)