இனிமே நம்ம ரூட்டு இதுதான்.. புதிய அவதாரம் எடுத்த ஜெயம் ரவியின் அதிர்ச்சி முடிவு..!

கடந்த 2003 ஆம் வருடத்தில் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ரவி. அத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றதால் அதன் பிறகு அவரின் பெயர் ஜெயம் ரவி என்று ஆனது.

   

தொடர்ந்து பல திரைப்படங்களில் தன் தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றார். தற்போது, தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து தொடர்ந்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், ஜெயம் ரவி பேட்டி ஒன்றில் தான் விரைவில் இயக்குனராகப் போவதாக கூறி இருக்கிறார்.

இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, என்னிடம் மூன்று கதைகள் உள்ளன. முதல் கதை, யோகி பாபுவை வைத்து எடுக்கப் போகிறேன். அதற்கான அட்வான்ஸ் தொகையாக 500 ரூபாய் அவரிடம் கொடுத்துள்ளேன். அதைப்பற்றி அவரிடம் பேசும் போது, என் கையில் 500 ரூபாய் தான் இருந்தது. அதை அவரிடம் கொடுத்து உறுதி செய்து கொண்டேன்.

இன்னொரு கதை எனக்காக உருவாக்கியுள்ளேன். அதில், நான் தான் ஹீரோ. அதன் பிறகு மற்றொரு கதை ஒன்று தயாராக உள்ளது. அதில் யார் வேண்டுமானாலும் ஹீரோவாக நடிக்கலாம் என்பது போன்ற கதை. விரைவில் இயக்குனராக களமிறங்கவுள்ளேன். அதற்கான அறிவிப்பு இந்த வருடமே கூட வெளியாகலாம் என்று கூறியுள்ளார்.