வடிவேலு காலடியில கெடந்தானுங்க…. சக நடிகர்களை விளாசி தள்ளிய காமெடி நடிகர் ஜெயமணி…!

பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருந்த நடிகர் ஜெயமணி பேட்டி ஒன்றில் வடிவேலு பற்றி குறை கூறும் நடிகர்களை வறுத்தெடுத்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது, நடிகர் வடிவேலு உடன் நடித்த நடிகர்கள் இப்போது அவரை குறை கூறி பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

   

இவர்கள் எதற்காக வடிவேலுவை நம்பி இருக்க வேண்டும். அப்போது அவரின் காலை பிடித்து வாய்ப்பு கேட்டு நடித்துவிட்டு, அவருடனேயே இருந்து விட்டார்கள். இப்போது அவர் வாய்ப்பு கொடுக்கும் அளவில் இல்லை. தனியாக மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். முன்பு போல் அவரின் நிலைமை இல்லை.

வடிவேலுப் பற்றி குறை கூறினால் youtube காரர்கள் பேட்டி எடுக்க வருவார்கள் என்று இப்போது அவரை பற்றி பேசி வருகிறார்கள். ஏன் இப்படி செய்ய வேண்டும்? அவரை எதற்காக நம்புகிறீர்கள்? நீங்கள் தனியாக வரவேண்டியது தானே? அவர் காலடியில் ஏன் கிடக்க வேண்டும்? என்று பேசி இருக்கிறார்.