லண்டன் வீதிகளில் காதலியுடன் ஜாலியாக சுற்றித் திரியும் நடிகர் காளிதாஸ்… லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயராம். தனது தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்தவர் தான் இவரது மகன் காளிதாஸ் ஜெயராம்.

   

மலையாள நடிகரான காளிதாஸ் ஜெயராம் தமிழில் ‘மீன் குழம்பு மண்பானையும்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து புத்தம் புது காலை மற்றும் பாவ கதைகள் போன்ற அந்தோலஜி படங்களில் நடித்துள்ளார். பாவ கதைகள் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் அனைவராலும் பாராட்ட பெற்றது.

இதை தொடர்ந்தவர் ‘பேப்பர் போட்’ என்ற வெப் சீரியஸிலும் நடித்துள்ளார். உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தில், கமலஹாசனுக்கு மகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் மாடல் அழகியான தாரணி காளிங்கராயனை காதலிப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து அவ்வப்பொழுது இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இதை தொடர்ந்து அவர்களது வீட்டிலும் சம்மதம் தெரிவிக்கவே தற்பொழுது வெளிப்படையாகவே இவர்கள் காதல் பறவைகளாக சுற்றி வந்து கொண்டுள்ளனர்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் தாரிணி காலிங்கராயர். இவர் தற்பொழுது தனது காதலன் காளிதாஸ் ஜெயராமுடன் இணைந்து லண்டன் வீதிகளில் சுற்றித் திரியும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.