இப்போ 130 கோடி சம்பளம் வாங்கும் கமல் ஹாசன்… முதன் முதலில் வாங்கிய சம்பளத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்..!!

நடிகர் கமல்ஹாசன்

இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வரும் கமல்ஹாசன் 1960 ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மேலும் இவர் தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல மொழிகளில் நடித்து பல ரசிகர்களை கவர்ந்தார். தற்போது கமலஹாசனுக்கு 68 வயதாகும் நிலையில், இளம் நடிகரைப் போன்று கேங்ஸ்டர் படங்களின் கதாநாயகராகவும் நடித்து வருகிறார்.

கமல் ஹாசன் முதன் முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா

   

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் மாபெரும் வெற்றியடைந்ததையடுத்து, தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.  இதனை தொடர்ந்து தற்போது கமல் 233, கல்கி, கமல் 234 என பல படங்களை கைவசம் வைத்துள்ள இவர் கல்கி படத்தில் வில்லனாக நடிக்க ரூ. 130 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கமல் ஹாசன் முதன் முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா

முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம்

இந்நிலையில் இன்று ஒரு படத்தில் நடிக்க இவ்வளவு சம்பளத்தை வாங்கும் கமல், தன்னுடைய முதல் படத்திற்காக வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

கமல் திரைப்பயணம்: 6 முதல் 60 வரை- Dinamani

அதன்படி, அவரின் முதல் படமான களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ரூ. 500 சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி, ரசிகர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அபுதாபியில் சர்வதேச இந்திய திரைப்பட விழா: கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது | Tamil cinema Lifetime Achievement Award to actor Kamal Haasan at the International Indian Film ...