
கெளதம் கார்த்திக்
தமிழ் சினிமாவில் நவரச நாயகனாக திகழ்பவர் நடிகர் கார்த்திக். இவரது மகன் கெளதம் கார்த்திக் மணிரத்தினம் இயக்கிய கடல் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். மேலும் இவர் சிப்பாய், என்னமோ ஏதோ, வை ராஜா வை, இந்திரஜித் போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். சமீபத்தில் தன்னுடன் நடித்த நடிகை மஞ்சுமா மோகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நவரச நாயகன் கார்த்திக் 1988ல் ராகினி என்பவரை திருமணம் செய்து கெளதம் கார்த்திக் மற்றும் கைன் கார்த்திக் என்ற இரு மகன்கள் இருந்தனர். அதன்பின் 4 வருடங்களுக்கு பின் முதல் மனைவியின் தங்கை ராகினியை இரண்டாவதாக திருமணம் செய்தார். பின் அவருக்கு ஒரு மகன் பிறந்தார்.
பேட்டி
அண்மையில் பேட்டியொன்றில், தந்தையின் இரண்டாம் திருமணம் செய்தது பற்றிய பல விசயங்களை கெளதம் கார்த்திக் பகிர்ந்துள்ளார். அதில் என் அப்பா இரண்டாம் திருமணம் செய்து கொண்டதால் என் அம்மாவும், அப்பாவும் பிரிந்துவிட்டார்கள். இதனால் நான் தனிமையில் வாடினேன் என்றும் அப்பா சென்னையில் இருந்ததால், அம்மாவுடன் நான் மும்பையில் வாழ்ந்து வந்தேன் என்றும் கூறினார்.
மேலும் இரண்டு வருடத்தில் எப்போதாவது தன் அப்பாவிடம் இருந்து போன் வரும் எப்போவாவது தான் பார்க்க வருவார் என்றும் உண்மையை உடைத்துள்ளார். இந்நிலையில் சிங்கிள் மதராக என் அம்மா எங்களை வளர்த்தார் மற்றும் பிரச்சனைகள் வந்தாலும் அதையும் மீறி என்னையும், என் தம்பியையும் வளர்த்து வந்ததாக கெளதம் கார்த்திக் தெரிவித்துள்ளார்.