பல்லி பூச்சியெல்லாம் சாப்பிட்ட கமல்ஹாசன்… தனியா போய் வாந்தி எடுத்த பயில்வான் ரங்கநாதன்…!

நடிகரும், பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் உலகநாயகன் கமல்ஹாசன் பற்றி கூறியிருக்கிறார். அவர் தெரிவித்ததாவது, சாப்பிடுவதில் ரஜினிக்கு அப்படியே  நேர்மாறானவர் கமல்ஹாசன். அவர் சாப்பிடாத அசைவ உணவுகளே கிடையாது. அனைத்து வகையான உணவுகளையும் சாப்பிட்டு விடுவார்.

   

சீனர்கள் சாப்பிடும் பல்லி, பூச்சி போன்ற உணவுகளையும் ருசித்து விடுவார். ஒரு முறை அவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் உணவில் ஈசல் இருந்தது. அதை பார்த்தவுடன் தனியாக சென்று வாந்தி எடுத்து விட்டேன். ஈசலை நெய்யில் வறுத்து சாப்பிடுவார். அத்தனை உணவுகளையும் சாப்பிட்டாலும் அவருக்கு செரித்து விடும்.

அதிகாலை 4 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி மேற்கொள்வார். மேலும் தான் தயாரிக்கும் படங்களில், பட குழுவினருக்கு அவர் சாப்பிடும் அனைத்து வகையான அசைவ உணவுகளையும் வைக்குமாறு கூறுவார். நானும் சாப்பிட்டிருக்கிறேன். சாப்பாடு போடுவதில் உண்மையிலேயே கமல்ஹாசன் சிறந்தவர் என்று தெரிவித்துள்ளார்.