இந்தப் பள்ளிப் பருவ புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகர் யார் தெரியுமா?… தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகர் மதுரை முத்து. இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு சின்னத்திரையில் ஸ்டாண்ட் அப் காமெடி செய்து மிகவும் பாப்புலரான ஒருவராக இருந்து வருகிறார்.

   

இதைத்தொடர்ந்து தன்னுடைய பட்டிமன்ற பேச்சால் அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறார். பல நேரங்களில் இவர் பேச்சும் பேசுங்கள் டைமிங் காமெடியாக இருப்பதால் ரசிகர்கள் தங்களுடைய மனக்கவலையை மறந்து வாய்விட்டு சிரித்து வருகிறார்கள்.

தற்பொழுது இவர் பல பொது நிகழ்ச்சிகளிலும் விருந்தினராக கலந்து கொள்கிறார். இதன் மூலமும் சம்பாதித்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க மதுரை முத்து சொந்தமாக youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில்  அவர் தனது அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

சமூக வலைத்தளங்களில் அவ்வப்பொழுது பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் வைரலாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்பொழுது நடிகர் மதுரை முத்துவின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இப்புகைப்படத்தில் நடிகர் மதுரை முத்து வெள்ளை நிற ஷர்ட்டில் நெத்தியில் பொட்டுடன் நிற்கிறார்.