நான் செஞ்ச அந்த ஒரு தப்பு… இனிமே அப்படியான ஒரு தப்பை செய்ய மாட்டேன்…!! வேதனையில் புலம்பி தள்ளிய நடிகை மாளவிகா..!!

நடிகை மாளவிகா மேனன்

2013ஆம் ஆண்டு விழா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மேனன். இவர் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பேய் மாமா , நிஜமா நிழலா போன்ற படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் தமிழில் இவன் வேற மாதிரி என்ற படத்தில் கதாநாயகியின் தங்கையாக நடித்து, பிரபலமானார்.

   

மாடலிங் துறையிலும் பிஸியாக இருந்து வரும் இவர், சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கூறியதாவது, “2011ல் சினிமா கேரியரை ஆரம்பித்த எனக்கு சரியான படங்கள் அமையவில்லை என்றும் அதற்கு காரணம் பட வாய்ப்பு கிடைக்க நான் செய்த தவறுதான் என்றும் கூறினார்.

படத்தின் கதையை கேட்கும் போது எனக்கான கதாபாத்திரம் இல்லாத போதும் அதில் நடித்தேன் மற்றும் கதை, திரைக்கதை குறித்த புரிதல் இல்லாமலும் அப்படி நிறைய படங்களை நான் தவறவிட்டு இருக்கிறேன் என்றார்.

மேலும் அப்படி நான் இழந்த படத்தின் கதாபாத்திரத்தின் தன்மை மிகவும் வலுவானதாக இருக்கும் நிலையில், பின்னர் தவறவிட்டு விட்டோமே என்று நிறைய நாள் ஏங்கியும் இருக்கிறேன். எனவே இனிமேல் அப்படியான ஒரு தப்பை செய்ய மாட்டேன்.” இவ்வாறு நடிகை மாளவிகா மேனன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.