‘எப்ப பாத்தாலும் போதையில் இருக்கிற மாதிரியே இருக்காரே’… வைரலாகும் நடிகர் மன்சூர் அலிகானின் ஷூட்டிங் ஸ்பாட் குத்தாட்ட வீடியோ…

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் மன்சூர் அலிகான். விஜயகாந்த் நடிப்பில் உருவான கேப்டன் திரைப்படத்தில் இவர் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. வில்லனாக மட்டுமல்லாமல் கேரக்டர் ரோல்களிலும், காமெடி நடிகராகவும் நடித்து வருகிறார்.

   

இவர் படம் நடிப்பதில் பிஸியாக இருந்தாலும் மற்றொரு பக்கம் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது கருத்துள்ள மற்றும் சில வேடிக்கையான வீடியோக்களையும் இவர் இணையத்தில் பகிர்வது வழக்கம். சட்டமன்றத் தேர்தலில் மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிட்டு படுத்து தோல்வி அடைந்தார். அதன் பிறகு சினிமாவில் மீண்டும் நடித்து வருகிறார்.

தற்போது இவர் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நடிகர் மன்சூர் அலி கானின் மகன் அலி கான் துக்ளக் ஹீரோவாகவும் வெள்ளித்திரையில் கால் பதித்து கலக்கி வருகிறார். நடிகர் மன்சூர் அலி கானுக்கு ஒரு மகளும் உள்ளார்.

தற்பொழுது நடிகர் மன்சூர் அலி கான் ‘சரக்கு’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘எப்ப பார்த்தாலும் போதையில் இருக்கிற மாதிரி இருக்கீங்க’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வைரல் வீடியோ…

https://www.instagram.com/reel/CrXsZipAqm5/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==