80ஸ் புன்னகை அரசி கே.ஆர்.விஜயாவா இது..? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?.. வெளியான குடும்ப புகைப்படங்கள்…

தென்னிந்திய சினிமாவில் 70-80 களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் கே ஆர் விஜயா.

   

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 

1963 ஆம் ஆண்டு கற்பகம் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக இவர் அறிமுகமானார்.

இவரின் முதல் படமே நல்ல வெற்றியைத் தேடித் தந்த நிலையில் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து அசத்தினார்.

புன்னகை அரசி என்று அழைக்கப்பட்ட இவர் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன் உடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

வெறும் பத்தே வருடங்களில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த சாதனை படைத்த நடிகை இவர்தான்.

இவர் தற்போது வரை நான் இருக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படி சினிமாவில் பிசியாக இருந்த இவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் தொழிலதிபருமான சுதர்சன் எம் வேலாயுதம் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

 

இவர்களுக்கு ஹேமலதா என்ற ஒரு மகளும் உள்ளார். இதனிடையே கே ஆர் விஜயாவின் கணவருக்கு மூன்று மனைவிகள்.

அதில் மூன்றாவது மனைவி தான் கே ஆர் விஜயா. வேலாயுதம் நாயர் கடந்த 2016 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

தற்போது கே ஆர் விஜயா தனது மகளுடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் கே ஆர் விஜயாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.