மன்சூர் அலிகான்
நடிகர் மன்சூர் அலிகான் ஆர். கே. செல்வமணி இயக்கிய கேப்டன் பிரபாகரன் (1991) என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே வில்லன் ரோலில் திறமையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதனால் இவருக்கு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
மேலும் இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு பல படங்களில் வில்லனாக நடித்த பின், திடீரென அரசியலுக்குள் சென்று, நாம் தமிழர் கட்சியில் இணைந்தார். பின்னர் நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்ட நிலையில், பிறகு தனி கட்சியையும் தொடங்கினார். ஆனால் அதுவும் தற்போது காணாமல் போனது.
பேட்டி
இந்நிலையில் மன்சூர் அலிகான் சமீப காலமாக நகைச்சுவை ரோலிலும் கலக்கி வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது விஜய் நடித்துள்ள லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், அதற்காக அவர் கொடுத்துள்ள பேட்டியில் பேசியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது நடிகைகளுடன் படுக்கையறை காட்சி நடிக்கும் போது ஜாலியாக இருந்தது என்றும் அதிலும் நடிகை ரம்யா கிருஷ்ணனுடன் நடித்தது நன்றாக இருந்தது என்பது போல் அதில் கூறியுள்ளது பரபரப்பை கிளப்பி வருகிறது.