மறைந்த நடிகர் மாரிமுத்து நடித்த படங்கள் ஒரே ஆண்டில் இவ்வளவா..? வைரல் வீடியோ இதோ…!!

நடிகர் மாரிமுத்து

இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு சினிமா துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த  யுத்தம் செய் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

அட எம்மா ஏய்' பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார் | Tamil cinema actor marimuthu passed away

   

பின் பல படங்களில் நடித்து வந்த இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் ஆதிகுணசேகரன் என்ற கேரக்டரில் வில்லனாக நடித்தார். இந்நிலையில் நேற்று காலை எதிர்நீச்சல் தொடரின் டப்பிங் பணியில் மாரிமுத்து ஈடுபட்ட போது,  மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இவர் நடித்த படங்கள்

இவர் ராஜ்கிரணின் அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசா தான் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக தன் திரைப்பயணத்தை தொடங்கி, பிறகு இயக்குநர்கள் மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே சூர்யா போன்றவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். மேலும் இயக்குநராக கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களையும் இயக்கி, எதிர்பார்த்த வெற்றி பெற முடியவில்லை என்றாலும், நடிகராக யுத்தம் செய் படத்தின் மூலம் நடித்தார்.

அதிர்ச்சி.. ஜெயிலர், எதிர்நீச்சல் மாரிமுத்து காலமானார்.. ஏய் இந்தாம்மா என பிரபலமானவர் மறைவு! | Ethirneechal fame Actor and Director Marimuthu passes away due to heart attack ...

Pariyerum Perumal Tamil Movie | Kathir | Anandhi | Yogi Babu | Mari Selvaraj - YouTube

இவர் வாலி, யுத்தம் செய், ஜீவா, கிருமி, மருது, பரியேறும் பெருமாள் , ஜெயிலர், விக்ரம் போன்ற படங்களிலும் 2021 -ல் 14 படமும், 2022-ல் 11 படமும் நடித்துள்ளார். ஆனால் இத்தனை படங்களிலும் கிடைக்காத பெயரும், புகழும் 2022-ல் இருந்து சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் நடித்தது மூலம் கிடைத்தது. இவர் நடித்த படங்கள் குறித்த வீடியோ இதோ,