‘தளபதி 67’ திரைப்படத்தில் நடிக்கும் முக்கிய நடிகரின் ஒரு நாள் சம்பளம் 10 லட்சமா?… தீயாய் பரவும் தகவல் இதோ…

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய். இவர் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். இவர் நடிப்பில் இறுதியாக ‘வாரிசு’ திரைப்படம் வெளியானது.

   

இத்திரைப்படத்தை ரசிகர்கள் தற்பொழுது கொண்டாடி வருகின்றனர் . ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலில் சாதனையும் படைத்து வருகிறது வாரிசு. இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.

இத்திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக திரிஷா இணைந்துள்ளார். இவர்களின் கூட்டணி 14 வருடங்களுக்கு பிறகு ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் இத்திரைப்படத்தை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சமீபத்தில் தளபதி 67 திரைப்படத்தின் பூஜை போடும்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. இதைத் தொடர்ந்து படப்பிடிப்பு புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தற்பொழுது இத்திரைப்படத்தில் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. இவருக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 10 லட்சம் வரை சம்பளம் பேசப்பட்டதாகவும் கூறப்பட்டு வருகிறது.