தன் மகனின் 25 வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் நெப்போலியன்… வைரலாகும் வீடியோ….

தமிழ்  சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் நெப்போலியன்.இவர்  1963ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தார்.இவருடைய உண்மையான பெயர் குமரேசன் துறைசாமி.இவர்  தந்தை துரை சாமி ரெட்டியார் தாய்  சரஸ்வதி அம்மாள்.

   

இவர் திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்தார். பின்னர் தனது 27 வயதில் உதயம் என்ற படத்தினை பார்த்து இவருக்கு நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டது.

1991ல்  பாரதிராஜவால்  புது ‘நெல்லு புது நாத்து’  என்ற படத்தில் மூலம் அறிமுகமானார்.இப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.

அதை  தொடர்ந்து  தமிழில்  இது நம்ம பூமி, சுயம்வரம் அய்யா, எட்டுப்பட்டி ராசா,  ஊர் மரியாதை, சின்ன தாயி,தர்ம சீலன்

,பங்காளி,  மறவன், எஜமான் போன்ற  பல படங்களில் நடித்தார். இவர் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம் ,மலையாளம் போன்ற மொழிப்படங்களில் நடித்தார்.

அதன்பின்னர் இவர் நெப்போலியன்.  2009ஆம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து வருகிறார் நெப்போலியன். திமுக சார்பில் போட்டியிட்டு ஒரு முறை எம்.எல்.ஏவாக ஆகியுள்ளார்அழகிரியின் விசுவாசியாக இருந்த நெப்போலியன், 2014ல் திமுகவை விட்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். ஏனெனில் திமுகவில் இருந்து அழகிரியை நீக்கிவிட்டனர்.

நடிகர் நெப்போலியன்  ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு  தனுஷ் நெப்போலியன் மற்றும் குனால் நெப்போலியன் என்ற மகன்களும் உள்ளனர்.

இவர் தான் குடும்பத்துடன்   அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தில் வசித்து   வருகின்றனர்.அவருடைய மூத்த மகன் தனுஷ் நெப்போலியனுக்கு தசைவளக் குறைபாட்டு நோய் உள்ளது.

இதனால் கடந்த பல வருடங்களாக அமெரிக்காவில் தங்கி அதற்கு மருத்துவ சிகிச்சை எடுத்து வருகின்றனர். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ளவர். ஜூலை 29ஆம் தேதி இவருடைய மகன் தனுஷின் 25ஆவது பிறந்த நாளை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடி உள்ளனர்.  தற்போது இந்த வீடிய இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.