
நடிகை நயன்தாரா
தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரோடு சினிமாவில் டாப் நடிகையாக உள்ளார். இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் பல படங்கள் நடித்துள்ளார்.
ஆனால் நயன்தாரா அவர் நடிக்கும் படத்தின், ப்ரோமோஷன்களில் பங்கேற்க மாட்டார் என பலர் கூறி வந்த நிலையில், தற்போது பாலிவுட்டில், ஷாரூக்கானுடன் நடித்த ஜவான் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்கவில்லை.
ஆனால் அவரது கணவர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து, சருமத்தை பாதுகாக்கும் 9 ஸ்கின் என்ற பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
அண்மையில் இதன் அறிமுக விழா மலேசியாவில் நடைபெற்ற பொது நயன்தாரா பங்கேற்ற நிலையில், பட ப்ரோமோஷனில் மட்டும் ஏன் பங்கேற்பதில்லை என பலர் கேள்வி எழுப்பினர். இதற்கு அவரது கணவர் விக்னேஷ் சிவன் கூறியுள்ளதாவது, “படம் நன்றாக இருந்தால், அதுவே promote செய்துகொள்ளும். That’s her inner belief” என்றார்.