கணவர் 4 வருடங்களாக ‘வேறொரு பெண்ணுடன் உறவு.. தனித்து விடப்பட்ட மகன்..!வழக்கை கொடுத்த ஸ்கூல் சீனியர் சம்யுக்தவின் அதிர்ச்சி பின்னணி..

மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டவரான சம்யுக்தா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானார். இவர் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், இவருக்கு ரயான் என்ற மகனும் உள்ளார். இவர் பிரபல தனியார் சேனலுக்கு பேட்டி அளித்த போது, கணவரை பிரிந்தது குறித்து பேசியுள்ளார்.

   

அப்போது என் கணவர் துபாயில் வேலை பார்த்து வந்த நிலையில், அங்கு அவர் 4 ஆண்டுகளாக வேறு ஒரு பெண்ணுடன் தவறான உறவில் இருந்துள்ளார். அது  எனக்கு 4 ஆண்டுகள் கழித்து தான் தெரியவந்தது. இதைக்கேட்ட உடன் அங்கு போகலாம் என நினைத்தேன். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

மேலும் இந்த கவலையால் இருந்த போது, என்னை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பரிந்துரை செய்தது,  விஜய்டிவி தொகுப்பாளினி பாவானா தான்.  விவாகரத்து செய்து பிரிந்து விடலாம் என்று நினைத்தால், அவர் இங்கே வர மறுக்கிறார். அதனால் சிக்கிக்கொண்டு இருக்கிறேன். எனவே வாழ்க்கையில் சரியான பார்ட்னரை தேர்ந்தெடுப்பது என்பது ரொம்ப முக்கியம்.” இவ்வாறு சம்யுக்தா பேசியுள்ளார்.