
நடிகை பாவனி ரெட்டி அமீர்
விஜய் டிவியில் நடந்த பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்துகொண்டவர் நடிகை பாவனி ரெட்டி மற்றும் அமீர். நடிகை பவானி விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னதம்பி சீரியலில் நந்தினி கேரக்டரில் நடித்து சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் தனி இடத்தை பிடித்தார். இதனை தொடர்ந்து சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக அடிக்கடி போட்டோ சூட் நடத்தி பல இளைஞர்களையும் தன் ரசிகர்களாக மாற்றி இருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமீர் தன் காதலை கூறியநிலையில், ஆனால் பாவனி அமீரை தம்பி என்று கூறி கொண்டிருந்தார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு பிக் பாஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டனர். முதலில் பாவனி காதலிக்க முடியாது என மறுத்து விட்ட நிலையில், சில காலத்தில் காதலை ஏற்றுக்கொண்டு அதை உலகத்திற்கும் அறிவித்துவிட்டார். பின் அவர்கள் இருவரும் ஜோடியாக இருந்து வரும் நிலையில், திருமணம் எப்போது என்று தான் எல்லோரும் கேட்டு வந்தனர்.
பிரேக்கப்?
இந்நிலையில் ரசிகர்களுடன் இன்ஸ்டாவில் உரையாடிய போது, ஒரு ரசிகர் பாவனியிடம் நீங்கள் கமிட்டா என்று கேட்டுள்ளார். உடனே பாவனி ரெட்டி நான் சிங்கிள் தான் என பதில் அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அமீர் – பாவனி ஜோடி விளக்கம் அளித்துள்ளனர். அதில் தங்களது பிரேக்அப் செய்தி உண்மை இல்லை என்றும் வதந்தி பரப்புகிறார்கள் என்றும் கூறியிருக்கின்றனர்.