
நடிகர் ஸ்ரீ
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த வழக்கு எண் 18/9 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக நடிகராக அறிமுகமானார் ஸ்ரீ என்கிற ஸ்ரீராம் நடராஜன். இவர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் (2013), மாநகரம் (2017) போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.
மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார். பின்பு விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் தமிழ் 1 நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.
இவர் தற்போது மலையாள கவர்ச்சி நடிகை சானியா ஐயப்பன் உடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
இவர்கள் உண்மையிலேயே திருமணம் செய்து கொண்டார்களா என விசாரிக்கும்போது தான் அது ஒரு படத்தின் ஸ்டில் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இவர் மாநகரம் படத்திற்கு பின் புது படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்த நிலையில், தற்போது ‘இறுகப்பற்று’ என்ற திரைபடத்தில் சானியா ஐயப்பன் உடன் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.