
நடிகர் பிரசாந்த் 90-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தார். அஜித், விஜய் போன்ற டாப் நடிகர்களுக்கே போட்டியாக வந்திருக்கக்கூடிய அவர் திடீரென்று காணாமல் போனார். அவர் நடித்த திரைப்படங்கள் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தன. நீண்ட நாட்களாக திரையுலகை விட்டு ஒதுங்கி விட்டார்.
இந்நிலையில் பத்திரிகையாளர் செய்யாறு பாலு, நடிகர் பிரசாந்தின் திருமண வாழ்க்கை குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது, கண்ணெதிரே தோன்றினாள் திரைப்படத்தில் நடித்த போது நடிகர் பிரசாந்திற்கு சிறிய விபத்து ஏற்பட்டது. அந்த சமயத்தில் அவருக்கு அறிமுகமான மருத்துவர் பிரசாந்தின் குடும்ப நண்பர் ஆனார்.
எனவே, தன் மகளை பிரசாந்திற்கு திருமணம் செய்து வைக்க நினைத்தார். அதன்படி, திருமணமும் நடந்தது. பிறகு தான், அந்த பெண் ஏற்கனவே திருமணமானவர் என்ற தகவல் பிரசாத்திற்கு தெரிய வந்தது. தன்னிடம் உண்மையை மறைத்து ஏமாற்றி திருமணம் செய்ததை தெரிந்த பின் அவர் மனமுடைந்து போனார்.
துரோகம் செய்ததால் பிரசாத் மிகவும் மன வருத்தத்திற்கு உள்ளானார். வாழ்வில் மிகப்பெரிய அடியாக அவருக்கு இருந்தது. அதன் பிறகு, அந்த பெண் பிரஷாந்த் தன்னிடம் வரதட்சனை கேட்பதாக, புகார் செய்தார். இப்படியாக வழக்கு நடந்தது என்று கூறியிருக்கிறார்.