ரூம்ல தனியா அப்படி பண்ணி பாப்பேன்..’நான் இப்படி ஆவேன் நினைச்சே பக்களா பிரியா வாரியர்..பளிச்

நடிகை பிரியா வாரியார்

நடிகை பிரியா வாரியார் மலையாளத்தில் வெளியான “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர். இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்றில் கண்ணடித்து, மலையாள ரசிகர்கள் மட்டுமல்ல, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய திரையுலகை தம் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.

   

அண்மையில் பேட்டி ஒன்றில் இவர் இந்த படம் குறித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, நான் சின்ன வயதில் இருக்கும்போது சினிமாவுக்கு சென்று படம் பார்த்துவிட்டு வந்த உடனே கண்ணாடி முன் நின்று படத்தில் கதாநாயகி கூறிய வசனங்களை சொல்லிப் பார்ப்பேன். இதை பார்த்த பெற்றோர் ஏதோ தமாசாக இப்படி செய்கிறார் என நினைத்தனர். ஆனால் நான் தற்போது நடிகையாக இந்த அளவிற்கு புகழ் பெறுவேன் என்பது யாருக்கும் தெரியாது.

மேலும் அந்தப் படத்தின் பாடல் காட்சியில், நான் கண்ணடித்ததை பார்த்த புகழ்பெற்ற நடிகர் ரிஷி கபூர், என்னை மிகவும் பாராட்டி இவருக்கு பெரிய ஸ்டார் அந்தஸ்து உள்ளது என்றார். மேலும் இப்படிப்பட்ட ஒரு நடிகையை நான் ஹீரோவாக இருந்த காலத்தில், எனக்கு கிடைக்கவில்லையே என்று ட்வீட் செய்து அனுப்பி இருந்தார்.

எனவே, எனக்கு எந்த அளவு பெயர், புகழ் கிடைத்தாலும், இப்படிப்பட்ட புகழ்பெற்ற நடிகரின் பாராட்டுகளை விட பெரிய பாராட்டு, உலகில் இனிமேல் எப்போதும் நடக்காது என்று பிரியா கூறியுள்ளார். எனவே இதுதான் எனக்கு பெரிய திருப்தியாக உள்ளது. இவ்வாறு நெகழ்ச்சியோடு, அந்த அனுபவத்தை பகிர்ந்து உள்ளார்.