ஆம்பிளைக்கு ஒரு நியாம்..! பொம்பலைக்கு ஒரு நியாமா.!! ரொம்ப கவலையா இருக்கு பிரியாமணி கடும் அப்செட்..?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவர் நடிகை பிரியாமணி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களையும் நடித்த இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்தி வீரன் படத்தின் மூலம் பிரபலமானார். இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார்.

கணவருக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதால் முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன்' – பிரியாமணி

   

இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் சில படங்களின் நடித்து வந்த இவர் தற்போது ஜவான் படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் ஷாருக்கானுடன் ஒரு பாடல் ஒன்றிலும் சேர்ந்து நடனமாடியுள்ளார்.

இவர் தனது வயது மற்றும் உடல் தோற்றத்தை பற்றி கேலி செய்பவரை கண்டிக்கும் வகையிலான கருத்துகளை அண்மையில் ஒரு பேட்டில் கூறியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, ஆண்கள் 40 வயதை கடந்தாலும், அவர்களைப் பார்த்து யாரும் “அங்கிள்” என அழைக்க மாட்டார்கள்.

ஆனால் பெண்கள் 40 வயது கடந்து விட்டாலே போதும், உடனே ஆன்ட்டி என்று அழைத்து வருகிறார்கள். தொடக்கத்தில் நானும் ஆன்ட்டி என்று என்னை பார்த்து கேலி செய்வதை நினைத்து அதிக கவலைப்பட்டு வந்தேன். ஆனால் தற்போது அதில் இருந்து மீண்டு இதுபோன்ற பேச்சுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது என புரிந்து கொண்டேன்.

நடிகை பிரியாமணி • ShareChat Photos and Videos

மேலும் பேசிய அவர், இப்படி கேளி செய்பவர்களும் ஒரு நாள் அந்த 40, 50 வயது காலகட்டத்திற்கு நிச்சயம் வருவார்கள். எனவே இந்த கேலி பேச்சுகளை குறித்து நான்  கவலைப்பட போவதில்லை.

 

எனக்கு தற்போது 39 வயதாகும் நிலையில், நான் இன்றும் பார்க்க அழகாக மற்றும் ஆரோக்கியமாக இருக்கிறேன். எனவே இந்த மாதிரியான பேச்சுகளை பெரிதாக காதில் போட்டுக் கொள்வதில்லை. எனது வேலைகளில் கவனமாக செயல்பட்டு வருகிறேன் என்றார்.