
டப்பிங் ஆர்டிஸ்ட் ரவீனா ரவி
தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான டப்பிங் ஆர்டிஸ்ட் ரவீனா ரவி, இவரின் இரண்டு வயதிலேயே டப்பிங் ஆர்டிஸ்ட் பணியை தொடங்கினார். மேலும் இவர் பல ஆர்டிஸ்ட்க்கு குரல் கொடுத்து இருக்கிறார். அந்த வகையில் ஓ காதல் கண்மணி, வேலையில்லாபட்டதாரி, பிரேமம், உத்தம வில்லன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களுக்கும் இவர் குரல் கொடுத்திருக்கிறார்.
மேலும் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த படம் ‘லவ் டுடே படத்தில் நாயகன் பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாகவும், யோகி பாபுவின் மனைவியாகவும் ரவீனா நடித்து இருந்தார். இந்த படத்தில் நடிகை ரவீனாவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாரட்டுக்கள் பெற்று, நல்ல விமர்சனத்தையும், வசூலையும் பெற்றது. பின் மாமன்னன் படத்தில் பகத் பாசிலின் மனைவியாக ரவீனா நடித்து இருக்கிறார். அதோடு இந்த படத்தில் இவர் சில காட்சிகள் மட்டும் நடித்துள்ளார்.
இவர் ஒரு பேட்டியில், ‘நடிகர் தனுஷ் என்னுடைய கிரஷ் லிஸ்டில் இருக்கிறார் என்றும் ஐ லவ் தனுஷ் சார்.. என்றும் கூறியுள்ளார். மேலும் பவர் பாண்டி படத்தின் போதும் அவ்வாறு என்னுடைய டப்பிங் ஸ்டூடியோவில் இருந்தார். அப்போது எனக்கு டப்பிங் செய்வதா..? இல்லை, அவரை பார்ப்பதா…? என எனக்கு தெரியவில்லை. மேலும் அவர் சொல்வதை கவனமுடன் கேட்டு டப்பிங் செய்வது என்னுடைய முதல் வேலை என்பதை தெரிந்து கொண்டேன்’. இவ்வாறு அந்த பேட்டியில் ரவினா கூறியுள்ளார்.