
விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவரும், நடிகருமான நடிகர் விஜயகாந்த் 71-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் தேமுதிக தொண்டர்கள், உற்சாகமாக கொண்டாடினர். மேலும் இவரது பிறந்தநாளுக்கு பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இவரைப் பற்றின வதந்திகள் அதிகமாகவே வெளிவந்து கொண்டிருந்த நிலையில், இவரது பிறந்தநாளில், இவரை நேரில் காண்பதற்காக, தொண்டர்கள் நேற்றைய நாளிலே தயாராகினர். பின்னர் இன்று அதிகாலையில் இருந்தே, தேமுதிக தொண்டர்கள் கட்சி அலுவலகத்தின் முன் குவிந்தனர். இன்று காலை 11 மணிக்கு விஜயகாந்த் வந்தார்.
அதுவும் வழக்கம்போல், வெள்ளை நிற ஆடை, விபூதி, கூலிங்கிளாஸ் அணிந்து வந்திருந்த விஜயகாந்தை பார்த்ததுமே, தொண்டர்கள் கரவொலி எழுப்பி வாழ்த்துகளை பெரும் முழக்கமிட்டனர். மேலும் சிலரின் கண்களில் கண்ணீர் வர, விஜயகாந்த தனது கைகளை உயர்த்தி, இரண்டு கைகளையும் கூப்பி வணக்கம் கூறியுள்ளார். இதன் பின் தனது கட்டைவிரலை காண்பித்த தருணத்தில், மக்களின் கூச்சல் சத்தம் கேட்டு, கட்சி அலுவலகமே அதிர்ந்ததாக கூறப்படுகிறது.