ஐய்யோ… ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் நடக்கும் இந்த சம்பவங்கள்… என் இரத்தம் கொதிக்கிறது… பிரபல நடிகையின் ஆவேச பதிவு..!!

நடிகை ரித்திகா சிங் 

நடிகை ரித்திகா சிங் ஒரு குத்துச்சண்டை வீரராகவும், ஒரு தற்காப்புக் கலைஞராகவும் சிறுவயது முதல், சிங்கிள் தந்தையின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சிப் பெற்றார். 2009 ஆசிய உள்ளரங்கு போட்டிகளில், 52 கிலோ எடை பிரிவில் குத்துச்சண்டை வீராங்கனையாக அறிமுகமானார். மேலும் இறுதி சுற்று என்ற படத்தில் குத்தச்சண்டை வீராங்கனையாகவே நடித்து பிரபலமானார்.

   

இவர் சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறை சம்பவங்களை பற்றி சோசியல் மீடியாக்களில் பேட்டி அளித்துள்ளார்.
அந்த பதிவில், “இளம் வயது பெண்கள், குழந்தைகளை துன்புறுத்துவது, பாலியல் வன்கொடுமை செய்வது மற்றும் கொலை செய்வது, இது போன்ற செய்திகளை வாசிக்கும் போது என்னுடைய இரத்தம் கொதிக்கிறது என்று ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

மேலும் தினமும் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக கேள்விப்படும் போது, இதை கேட்கும் போது மிகவும் பயமாக இருக்கிறது. எனவே நிறைய பெண்கள் இது போன்ற கொடுமைகளை அனுபவிக்கும் சூழ்நிலை இருப்பதால், உடல் ரீதியாக மற்றும் மன ரீதியாகவும் உடலை வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

எனவே அதற்கு முதலில் உடற்பயிற்சி செய்யுங்கள் என்றார். அதேபோல் தற்காப்பு கலைகளை, பெற்றோர்கள் உங்கள் குழந்தைகளுக்கு கற்க வையுங்கள். இந்த உலகில் அரக்கர்கள் காணப்படுவதால், அவர்களிடமிருந்து வருங்கால சந்ததியினரை பாதுகாப்பது நமது பொறுப்பாக உள்ளது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் வெளியிட்ட பதிவு வைரலாக பரவி வருகிறது.