கராத்தே-வில் பின்னி பெடலெடுக்கும் சீரியல் நடிகர் சஞ்சீவின் மகன்… வெளியான வைரல் வீடியோ…!

தமிழ் சினிமாவில் நடிகர் சஞ்சீவ் பல திரைப்படங்களில் விஜய்க்கு நண்பராக நடித்துள்ளாா். இவர் 2002 ஆம் ஆண்டில் மெட்டிஒலி தொலைக்காட்சி தொடரில் எதிர்மறை பாத்திரத்தில் நடித்து தொலைக்காட்சி துறையில் நுழைந்தார். பல எதிர்மறை மற்றும் ஆதார கதாபாத்திரங்களை செய்த பிறகு, திருமதி செல்வம் (2007-2013) என்ற தொடாில் அவர் முன்னணி கதாபாத்திரத்தில் முதல் முறையாக நடித்தாா். பின்னர் 2009 இல் சிறந்த தொலைக்காட்சி நடிகருக்கான தமிழ்நாடு மாநில விருது மற்றும் திருமதி செல்வத்தில் அவரது நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான சன் குடும்பம் விருது ஆகிய விருதுகளைப் பெற்றாா்.

sanjeev

   

இதனையடுத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிவந்த நடிகர் சஞ்சீவ், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோகினி தொடரில் நடித்துவந்தார். தற்போது அந்த தொடரில் இருந்து விலகி சன் டீவியில் ஒளிபரப்பாகி வரும் கண்மணி என்ற தொடரில் நடித்துவருகிறார். இவரும் பிரபல சீரியல் நடிகை ப்ரீத்தி என்பவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களுக்கு லயா என்ற மகளும், ஆதவ் என்ற மகனும் உள்ளனர். இவரது மனைவி பொம்மலாட்டம், பந்தம், ஆண்டாள் அழகர் போன்ற பிரபல தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய சஞ்சீவ் மனைவி பிரீத்தி தனது இணையதள பக்கத்தில், தற்போது தனது மகன் கராத்தே கற்றுக் கொள்ளும் வீடியோவை பதிவு செய்து தனது மகிழ்ச்சியை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…