‘அவளும் நானும்’… ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபியும் பாக்கியாவும் இவ்ளோ நெருக்கமா?… வைரலாகும் புகைப்படம்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘பாக்கியலட்சுமி’. இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ராவும், கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷும் நடித்து வருகின்றனர். இவரது நடிப்புக்கென்றே இந்த சீரியலை பார்ப்பவர்கள் ஏராளம். இவருக்கென தற்பொழுது பெரும் ரசிகர் பட்டாளமே இணையத்தில் உருவாகியுள்ளது.

   

தற்போது இந்த சீரியல் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.  பாக்கியலட்சுமி  சீரியலில் மனைவி பாக்கியலட்சுமிக்கு துரோகம் செய்து ராதிகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டிருப்பார். அந்த சீரியலில் இவர் தான் டெரரான நெகடிவ் கேரக்டர்.இவரை சீரியலில் பார்த்து திட்டுபவர்கள் தான் அதிகம் பேர் இருப்பார்கள்.

அந்த அளவுக்கு தான் கோபி கதாப்பாத்திரம் இருக்கும். சீரியலில் தான் அவர் அவ்வளவு டெரர், ஆனால் நிஜத்தில் நடிகர் சதிஷ் அப்படியே ஆப்போசிட். அவர் சமீபத்தில் தான் இன்ஸ்டாகிராமில் இணைந்தார். அதில் அவர் தொடர்ந்து பல்வேறு பதிவுகளை போட்டு வருகிறார். அவற்றிற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.

இவர் மிகவும் காமெடியாக தனது புகைப்படங்களுக்கு கேப்ஷன்கள் போட்டு வருகிறார். அவற்றை பார்த்து ரசிகர்கள் ‘உங்களுக்கா இப்படி ஒரு ரோல் கொடுத்திருக்காங்க’ என ஆச்சர்யத்துடன் கேட்டு வருகிறார்கள்.இந்நிலையில் சதீஷ் தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் நடிகை சுசித்ராவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட தற்பொழுது இப்பதிவு வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…