Weekend-ல் குடும்பத்துடன் என்ஜாய் செய்யும் நடிகை ராதிகா.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பிரபல நடிகையான ராதிகா சரத்குமார் எம்.ஆர் ராதாவின் மகள் ஆவார். நடிகை நிரோஷா, திரைப்பட தயாரிப்பாளர் ராதா மோகன் ஆகியோர் ராதிகாவுடன் பிறந்தவர்கள்.

   

நடிகர் ராதாரவி ராதிகாவின் உடன் பிறவா சகோதரர் ஆவார்.

நடிகர் ராதிகா தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

முதலில் பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் மூலம் ராதிகா திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.

கிழக்குச் சீமையிலே, சூரியவம்சம், இன்று போய் நாளை வா, சிப்பிக்குள் முத்து, நல்லவனுக்கு நல்லவன், ஊர்க்காவலன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் ராதிகா நடித்துள்ளார்.

ராதிகா முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்துள்ளார்.

80ஸ் காலகட்டத்தில் ராதிகா முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

நடிகை ராதிகா கடந்த 2001-ஆம் ஆண்டு பிரபல நடிகரான சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். முன்னதாக ராதிகாவிற்கு இரண்டு முறை திருமணம் ஆகி விவாகரத்து நடந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் வார இறுதியில் நாட்களை முன்னிட்டு ராதிகா தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். அவர் கடற்கரையில் என்ஜாய் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.