கலக்கல் காம்பினேஷன்.. குஷ்புவுடன் இணைந்து பட்டையை கிளப்பிய சிம்ரன்.. வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்..!!

பிரபல இயக்குனரான சுந்தர்.சி இயக்கிய அரண்மனை படத்தின் அனைத்து பாகங்களும் சூப்பர் ஹிட் ஆனது. தற்போது சுந்தர்.சி அரண்மனை 4 படத்தை எடுத்து முடித்துள்ளார். படம் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

   

இந்த படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ், கோவை சரளா உள்ளிட்டோர் ஏராளமான முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு சிம்ரனும் குஷ்பூவும் நடனமாடி உள்ளனர். அரண்மனை 4 படத்தை அவ்னி நிறுவனம் சார்பில் சுந்தர் சியும் குஷ்புவும் இணைந்து தயாரித்துள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவான அரண்மனை 4 படம் வெற்றிகரமாக ஓடி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் குஷ்பூ தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டதாவது, அரண்மனை 4 படத்தில் இடம்பெற்ற பாடல் இவ்வளவு ஆவேசமாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. பாடலின் போது மக்கள் நடனமாடி வழிபடுகின்றனர்.

உங்களது அன்புக்கு மிக்க நன்றி. என் தோழி பிருந்தா கோபாலின் அற்புதமான நடனமைப்பும் மிகச் சிறந்த நடன கலைஞரான சிம்ரன் இல்லாமல் இது சாத்தியமில்லை.

2024-ஆம் ஆண்டில் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் என்டர்டைன்மென்ட் படமாக அரண்மனை 4 இருக்கும். மீண்டும் எனது இதய பூர்வமான நன்றி என பதிவிட்டுள்ளார்.

குஷ்பூ சிம்ரன் சுந்தர்.சி, பிருந்தா ஆகியோர் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.