நண்பர்களுடன் ஏற்காட்டுக்கு சுற்றுலா சென்ற நடிகர்கள்.. இணையத்தில் வைரலாகும் சாந்தனு வெளியிட்ட வீடியோ..!!..!!

பிரபல நடிகரான சாந்தனு வேட்டிய மடிச்சு கட்டு என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.

   

இவர் பிரபல இயக்குனர் பாக்யராஜின் மகன் அவர் கடந்த 2008-ஆம் ஆண்டு ரிலீசான சக்கரகட்டி திரைப்படத்தின் மூலம் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமானார்.

இதனை அடுத்து ஆயிரம் விளக்கு, கண்டேன், அம்மாவின் கைப்பேசி உள்ளிட்ட திரைப்படங்களில் சாந்தனு நடித்துள்ளார்.

கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு செல்வதால் பிரபல நடிகர்கள் வெளிநாட்டுக்கு சென்று விடுமுறையை கொண்டாடுகின்றனர்.

ஏற்கனவே யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் மொரிசியஸ் தீவுக்கு சென்று விடுமுறையை என்ஜாய் செய்துள்ளனர்.

இதைப்போல நடிகர்கள் நடிகைகள் வெளிநாட்டுக்கு சென்று கோடை நாட்களை கழித்து வருகின்றனர்.

அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஏற்காடு சுற்றுலா தளத்திற்கு ஏராளமானோர் வருகை தருகின்றனர்.

ஆண்டுதோறும் மே மாதத்தில் அங்கு பூக்கள் பூத்து குலுங்கும்.

இந்த நிலையில் நடிகர் சாந்தனு, பரத், கலையரசன், விக்ராந்த், ஆதவ் ஆகியோர் விடுமுறையை கொண்டாட ஏற்காடு சென்றுள்ளனர்.

இதில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் முன்னாள் கணவர் ஸ்ரீகாந்தும் இருக்கிறார்.

அங்கே எடுத்த வீடியோவை சாந்தனு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.