புற்றுநோயால் அவதிப்பட்டு போராடிக் கொண்டிருந்த அங்காடி தெரு நடிகை சிந்து மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!!

நடிகை சிந்து குடும்ப வாழ்கை

தமிழ் சினிமாவில் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அங்காடி தெரு படத்தின் மூலம்  பிரபலமானவர் நடிகை சிந்து. இவர் குழந்தையாக இருக்கும்போதே அவருடைய தந்தை சத்தியம் ஸ்டூடியோவில் மணிகளை கோர்க்கும் வேலை செய்து வந்த நிலையில், அங்கு சிந்துவும் சென்று இருக்கிறார். பிறகு குழந்தை நட்சத்திரமாக பல சினிமாக்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், பல படங்களில் நடித்திருந்தார். இவரது அம்மா இவர் குழந்தையாக இருக்கும் போது இறந்துவிட்டாராம். இதனால் இவருடைய தந்தை சிந்துவிற்கு 14 வயது இருக்கும் போது, திருமணம் முடித்து வைத்து விட்டதாகவும், ஆனால் திருமணத்திற்கு பிறகு ஒரு குழந்தைக்கு அம்மாவாக மாறியுள்ளார்.

 

   

மேலும் சிந்து திருமணம் ஆன சில நாட்களில், இருந்தே கணவரின் கொடுமையால் அதிக கஷ்டங்களை அனுபவித்து இருந்தாராம். அவருடைய கணவர் குடித்துவிட்டு தினமும் வந்து சிந்துவை அடித்து துன்புறுத்திய நிலையில், 2 ஆண்டுகளில் தன்னுடைய அப்பா வீட்டுக்கு சிந்து போயிருக்கிறார். இந்நிலையில் தன்னுடைய குழந்தையை வளர்ப்பதற்காக சிந்து பல திரைப்படங்களில் நடித்தும் ஹோட்டல், சித்தாள் போன்ற கிடைத்த வேலைகளை  எல்லாம் செய்து வந்திருக்கிறார். அந்த சமயத்தில் சிந்துவின் அப்பாவும் இறந்து விட்டாராம்.

Angadi Theru Actress Sindhu Diagnosed with Breast Cancer - மார்பக புற்றுநோயால் அவதிப்படும் 'அங்காடி தெரு' நடிகை | Indian Express Tamil

திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த சிந்துவுக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது என்றால் அங்காடி தெரு திரைப்படம் தான், இந்த படத்தில் இவர் ஒரு விபச்சாரம் செய்யும் பெண்ணாக நடித்திருப்பார். இவரை கணேசன் திருமணம் செய்து அவருக்கு ஒரு குழந்தை பிறந்தது போன்று சீன் இருக்கும் நிலையில், அதில் சிந்து செண்டிமெண்ட் வசனம் பேசுவது, பலருடைய மனதையும் கரைத்து இருக்கும்.

புற்றுநோய்

சிந்துக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் இருந்ததால், அவர் மருத்துவனைக்கு  சென்று செக் பண்ணி பார்த்தபோது அவருக்கு புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின் புற்று நோய்க்கான மருத்துவ செலவு அதிகம் இருப்பதால் அவருடைய கையில் இருந்த பணம் சேமிப்பு எல்லாம்  மருத்துவனைக்கு செலவு செய்ய முடிந்துவிட்டது.

பிறகு எந்த பணமும் இல்லாமல் திரை துறையில் பலருடைய உதவியை கேட்டு சென்ற நிலையில், ஒரு சிலர் அவருக்கு உதவிகளை செய்திருந்தாலும் பலர் கண்டுகொள்ளாமல் விலகிப் போய் இருக்கின்றனர். இந்த புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நடிகை சிந்து கடந்த சில நாட்களாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். வலிகளோடு இத்தனை வருடங்களாகவே அதில் போராடிக் கொண்டிருந்த சிந்து இன்று அதிகாலையில் இயற்கை எய்திருக்கிறார். 42 வயதாகும் நடிகை சிந்துவின் மரண செய்தியை கேட்டு திரையுலகில் உள்ள பலரும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது ஆன்மா சாந்தி அடைய பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அங்காடி தெரு நடிகை சிந்து மரணமடைந்தார்.. அதிர்ச்சியில் திரையுலகம் | Actress Sindhu Died Because Of Breast Cancer