
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் தான்
நடிகை சித்தி இத்னானி. இவர் தனது முதல் படத்திலேயே திறமையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இவரை ரசிகர்கள் கண்ணக்குழி அழகி என்ற பட்டப் பெயருடன் அழைத்து வருகின்றனர்.
அந்த வகையில் இவர் குஜராத், தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் இவருக்கு கொடுத்த வரவேற்பால், மிகவும் மகிழ்ச்சியோடும், செல்லும் இடமெல்லாம் தமிழ் ரசிகர்களை புகழ்ந்து பேசாமல் இருக்க மாட்டார்.
அண்மையில் இவர் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் இவருக்கு நல்ல வரவேற்பையும், ரசிகர்களுக்கிடையே பெற்று தந்தது. நடிகை சித்தி இத்னானி சமீபத்தில் தினத்தந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.
அப்போது அவரிடம் உங்கள் கண்ணுக்குழி ரகசியம் என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, என் அம்மாவுக்கும், இதே போல் கன்னத்தில் குழி விழும். அந்த ஜீன்தான் எனக்கும் குழி விழுது போல… என்று புன்னகையுடன் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.