விஜய் சேதுபதி,அட்டகத்தி தினேஷ்…”ரெண்டு பேரும் சைல்ட் வுட் நண்பர்களா”.?இணையத்தில் லீக்கானது புகைப்படம்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவரை இவர ரசிகர்கள் ‘மக்களின் செல்வன்’ என்று செல்ல பெயரால் அழைப்பார்கள் இவர் நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்  ஆகியுள்ளது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி போன்ற பல  மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஹீரோ என்று இல்லாமல் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் துணிந்து நடிப்பதால் அவர் கையில் நிறைய படங்கள் இருக்கிறது.

   

நடிகர் சூரி நடிப்பில் வெளியான ‘விடுதலை’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து அட்லீ இயக்கத்தின் வெளியான’ ஜவான்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ‘ஜவான்’ திரைப்படத்தின் வெற்றி தொடர் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் அடுத்த திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார் .

அதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகர் அட்டகத்தி தினேஷ். இவர் தமிழில் ‘அட்டகத்தி’ என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.  இவர் பல படங்களின் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அட்டகத்தி தினேஷ் 14 வருடங்களுக்கு முன்பு தனது பிறந்த நாளன்று நடிகர் விஜய் சேதுபதி உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் திடீர் என்று வெளியாகி வைரலாகி வருது. இதில் இருவரும் நல்ல நண்பர்கள் என்றும் ஆள அடையாளம் தெரியாமலும் உள்ளனர்.