தனித்தீவில் அவருடன் இருக்கனும்னு ஆசை… பரபரப்பை கிளப்பிய ரஜினியின் மகள்…!

சௌந்தர்யா ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் டாப் நடிகரில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரின் இரண்டாவது மகள் தான் சௌந்தர்யா ரஜினிகாந்த். சௌந்தர்யா தன் அப்பாவின் அடையாளத்தை வைத்து சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி, ரஜினியை வைத்து கோச்சடையான் என்ற படத்தை இயக்கி இருந்தார். ஆனால் இந்த படத்திற்கு ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கவில்லை. இதனையடுத்து இவர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி-2  படத்தை இயக்கிய நிலையில், இதில் பல உச்ச நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

   

Rajini's daughter, Soundarya spoke openly with that celebrity in Tanithivi ..!

பேட்டியளித்த பிரபலம்

இந்நிலையில் இவர் விஜய் தொலைக்காட்சியில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் அளித்த பேட்டியில் பிரபலத்தை குறித்து பேசியுள்ளார். அதில் சௌந்தர்யாவிடம் தனித்தீவில் யாருடன் இருக்க ஆசைப்படுவீர்கள் என்று தொகுப்பாளர் கேட்ட போது, இதற்கு பதில் அளித்த அவர், திரைப்பட தயாரிப்பாளரான “ஷங்கர் மற்றும் ராஜமௌலி உடன் இருக்க ஆசைப்படுவேன். மேலும் அவர்களுடன் பேச நிறைய விஷயம் இருக்கிறது” என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பலத்த அடிவாங்கியும் அடங்காத ரஜினி மகள்கள்.. இரண்டாவது மகள் அப்பாவுக்கு வைக்க போகும் ஆப்பு..