போனி கபூர் : கோடிகளுக்கு ஆசை பட்டு என் மனைவியை நான் கொன்றேனா..! வெளியான ‘ஶ்ரீதேவி மரணத்தின்’ மர்மம்..?

நடிகை ஸ்ரீதேவி

தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் பிறந்து இந்தியத் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற ஒரு நடிகையாகவும், 80, 90 களில் பிரபல நடிகையாகவும்  இருந்தவர் ஸ்ரீதேவி. இவர் 1969ல் துணைவன் திரைப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடத்தில் அறிமுகமானார். பின்னர் கதாநாயகியாக இவர் நடித்த முதல் படம் கே. பாலச்சந்தரின் மூன்று முடிச்சு (1976). மேலும் ஆரம்ப காலத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த்துடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்தார்.

   

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி திரைப்படங்களில் நடித்தார். தனது நடிப்பிற்காக தமிழ்நாடு, ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும், கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும், நான்கு முறை பிலிம்பேர் விருதினையும் வென்றார்.

1996 அன்று ஸ்ரீதேவிக்கும், இந்தித் திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியருக்கு ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இது வரை 300 படங்களில் நடித்துள்ளார். இவரது கடைசி படமும் 300வது படமாகும். இதனையடுத்து கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இவருக்கு 2013 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.

இவர் தமிழில் நடித்த கடைசி படம், விஜய்யின் புலி படம் ஆகும். ஸ்ரீதேவி 2018ம் ஆண்டு குடும்பத்துடன் துபாய்க்கு சென்ற இடத்தில், பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில், அடிபட்டு அந்த இடத்திலேயே உயிரிழந்ததாக செய்திகள் வந்தது. இவர் இறக்கும் போது இவருக்கு 54 வயது இருக்கும்.

மேலும், அண்மையில் பேட்டி ஒன்றில் ஸ்ரீதேவி இறப்பு குறித்து கணவர் போனிகபூர்  கூறியுள்ளதாவது, என் அன்பு மனைவியை நானே கொன்று விட்டதாக, பலர் பேசினர். ஆனால் அவள் இறக்கும் அன்று, பாத்ரூமில் அப்படி மயங்கி விழ காரணமே அவர் தனது உடம்பை எப்போதுமே ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள வேண்டும் என எண்ணுவார். இதனால் பல வேளைகள் உணவு உண்ணாமல் தவிர்த்து விடுவதால், லோ பிபி அவருக்கு இருந்தது. இவ்வாறு இறப்பிற்கு முன் பல முறை வீட்டிலும் ஸ்ரீதேவி மயங்கி விழுந்துள்ளார். இவ்வாறு போனி கபூர் கூறியுள்ளார்.